இலங்கை

குழாய் நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குழாய் நீருக்கான கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நீர் விநியோக ராஜாங்க அமைச்சர் சுதர்சனீ பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

குழாய் நீரை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் விரைவில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆயிரம் லீற்றர் நீரை சுத்திகரித்து வழங்க வெறும் 12 ரூபா அறவீடு செய்வதாகவும், போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு லீற்றர் நீர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எவ்வளவு தொகையினால் கட்டணத்தை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply