விளையாட்டு

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான முதல் இருபதுக்கு20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்ஹம்டனில் நடைபெற்ற இந்தப்  போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஏ.பி. டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றியீட்டியது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers