இலக்கியம் புலம்பெயர்ந்தோர்

நூல் வெளியீடு : பேயாய் உழலும் சிறுமனமே.

எழுத்தாளர் இளங்கோவின்  மூன்றாவது நூலான பேயாய் உழலும் சிறுமனமே என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை கனடாவில் ஸ்காபுறோ சிவிக் சென்ரரில்  மாலை 3 மணிக்கு நிகழ உள்ளது.

கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், இலக்கிய விமர்சகர் எனப்பன்முக ஆளுமை கொண்ட இளங்கோ அவர்கள் யாழ்ப்பாணம் அம்பனையிற் பிறந்தவர். போரின் நிமித்தம் ஈழத்திலிருந்து தன் பதினாறாவது வயதிற் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இவர் தற்பொழுது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். இவரது கவிதைத் தொகுப்பான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ 2007லிலும், சிறுகதைத் தொகுப்பான ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ 2012லிலும் வெளிவந்திருக்கின்றன.  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருது 2008ல் ‘நாடற்றவனின் குறிப்புகளுக்கு’ வழங்கப்பட்டமையையும் இங்கு நினைவு கூரலாம்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply