விளையாட்டு

நியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் லூக் ரோங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

நியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் லூக் ரோங்கி (luke Ronchi )
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  எனினும் கழக இருபதுக்கு இருபது போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
36 வயதாகும் ரோங்சி முதலில் 2008-09க்கு இடையேயான காலப்பகுதியில்  அவுஸ்திரேலியாவுக்காக 4 ஒருநாள் போட்டிகளிலும் 3 இருபதுக்கு இருபது  போட்டிகளிலும் விளையாடிய பின்னர் 2013 ஆம் ஆண்டு தன் சொந்த நாடான நியூஸிலாந்துக்கு திரும்பினார்.

2015 ஆண்டு உலகக்கோப்பையில் இறுதி வரை முன்னேறிய நியூஸிலாந்து அணியில்  லூக் ரோங்சி  முக்கிய பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐசிசி சம்பியன் கிண்ணப் போட்டியில் இவர்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 43 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஐசிசி சம்பியன் கிண்ணப் போட்டியில் இவர்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 43 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply