குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் பரவி வரும் நிலையில் இவ்வாறு போராட்டமொன்றை நடத்துவோரை மருத்துவர்கள் என அடையாளப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமைகள் குறித்து மக்களும் ஆத்திரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment