படைவீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வட்டியில்லா கடன் வழங்கியுள்ளது. ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் நீத்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சேவா வனிதா பிரிவினால் இந்த கடன் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். சுமார் ஐம்பது பேருக்கு இவ்வாறு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment