இந்தியா

பெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்


இந்தியாவின் பெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சிப்பதாக் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகலையடுத்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில் அம்மோனியம் குளோரைட் எனும் வேதிப்பொருள் அடங்கிய பைகளுக்கு நடுவே 2 பைகளில் 2½ கோடி ரூபா மதிப்புள்ள 50 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் குடோனில் இதேபோன்று போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதனைத்தொடர்ந்து, அங்கு  சென்று சோதனை நடத்தியதில் 17 பைகளில் இருந்த 425 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பறிமுதலி செய்யப்பட்டது.

2 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 24 கோடி ரூபாமதிப்புள்ள 475 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply