இலங்கை

கொள்ளையிடச் சென்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிரிழப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொள்ளையிடச் சென்ற நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை வரகாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை கொள்ளையிடச் சென்றிருந்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போது காவல்துறையினர் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளையிட்ட நபர் பற்றி 119 காவல்துறை அவசர அழைப்புச் சேவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அழைப்பின் அடிப்படையில் சென்ற காவல்துறையினர், தப்பிச் சென்ற கொள்ளையர் மீது துப்பாக்சிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.