குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக, தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அது குறித்து நடவடிக்கைகள் எடுப்படும் என தேசிய காவல்துறை ஆணைக்குழுவின்; செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக பல மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment