ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலின் போது 3 ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் மூவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொசூல் நகருக்கு எதிரே உள்ள தால் அபார் நகரில் ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துவதாக ஈராக் ராணுவத்துக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தினை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love
Add Comment