விளையாட்டு

டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானம்

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

தென் ஆபிரிக்க அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஏ.பி. டிவில்லியர்ஸ் (AB De Villiers) டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ள டிவில்லியர்ஸ் முயற்சி மேற்கொண்டிருந்தார்.

எவ்வாறெனினும், எதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர் வரையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு டிவில்லியர்ஸ் தீர்மானித்துள்ளார்.

எனினும், இந்த விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply