குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசியல் சாசனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் மாலையில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் எனவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment