குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த பிரஜைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இத்தாலி அனுப்பி வைப்பதாக கூறி இந்த இலங்கையர்கள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இத்தாலி செல்லும் நோக்கில் அவர்கள் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக பல்கேரியாவின் 38 அதிகாரிகளும் விமானத்தில் பயணித்துள்ளனர். இலங்கையர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Add Comment