இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா – நெதர்லாந்துக்கு இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன:-

இந்திய பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்தியா – நெதர்லாந்துக்கு இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றையதினம் நெதர்லாந்துக்கு சென்றிருந்தார். அங்கு அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.