பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

சிவலோகநாதன் தனபாலசிங்கத்தை நாடு கடத்துவதை பிற்போடுமாறு கோரிக்கை:-

கனடாவில் மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவரை நாடு கடத்துவதை தடுக்குமாறு கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிரான கனேடிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் கியூபெக் குரோன் வழக்கறிஞர்கள், சிவலோகநாதனின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நாடுகடத்தப்பட்டால் வழக்கு விசாரணைகளில் சமூகமளிப்பாரா எனும் சந்தேகம் ஏற்பட்டுமள்ளதாக தெரிவித்தே இவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தனபாலசிங்கம் தாமாகவே நாடு கடத்துவதனை ஏற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply