குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுப்பதற்கான குறைந்தபட்ச தர நிர்ணயங்களை இலங்கை அரசாங்கம் பின்பற்றத் தவறியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கம் மேலும் முனைப்பு காட்ட வேண்டுமென வலிறுத்தப்பட்டுள்ளது.
சாட்சியாளர்கள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஒர் விசேட காவல்துறை பிரிவு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென கோரியுள்ளது.
Spread the love
Add Comment