விளையாட்டு

6 மாதம் தடைவிதிக்கப்படுமென வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை எச்சரிக்கை :

கிரிக்கட் சபையின் கொடுப்பனவு திட்டத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிடில் 6 மாதம் தடைவிதிக்கப்படும் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.  அவுஸ்திரேலிய கிரிக்கட் சபைக்கும் கிரிக்கெட்  வீரர்களுக்கும் இடையில்  கொடுப்பனவு திட்டம் தொடர்பில் சிக்கல்நிலை காணப்படுகின்றது.

இரண்டு தரப்பிற்கும் இடையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் கேட்கும் கொடுப்பனவு  கிடைக்கும் வரை போராடுவோம் எனவும்  ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் எனவும் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 30ம் திகதி வரையில் வீரர்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காவிட்டால்  6 மாதம் தடையை சந்திக்க வேண்டியிருக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply