விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தரவரிசையில் அண்டி மரே – அஞ்சலிக் கெர்பரும் முதலிடம்


விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரித்தானிய வீரர் அண்டி மரே ( Andy murrey)யும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜேர்மனியின்  அஞ்சலிக் கெர்பரும் (Angelique kerber) முதலிடம் பிடித்துள்ளனர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி  எதிர்வரும் யூலை 3ம் திகதி முதல் 16ம்திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் போட்டி தரவரிசைப்பட்டியலை போட்டி அமைப்பு குழுவினர் நேற்றைதிய தினம் அறிவித்துள்ளனர்.

அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் நடப்பு சம்பியனான  அண்டி மரே முதலிடத்திலும் செர்பியாவின் ஜோகோவிச் 2வது இடமும், சுவிட்சர்லாநதின் ரோஜர் பெடரர் 3வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று  பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்திலும் ரூமேனியாவின் சிமோனா ஹாலெப் 2வது இடத்திலும் செக்குடியரசின் பிளிஸ்கோவா 3வது இடத்திலும் உள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap