இலங்கை பிரதான செய்திகள்

கைதிகள் தாக்கப்படுவதனை கண்டித்து கிளிநொச்சி சட்டத்தரணிகள் நீதி அமைச்சருக்கு மகஜர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை  படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை அவர்களில் ஐந்தாம் சந்தேக நபரை அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சிறைக்காவலர்கள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் குறித்த வழக்கு முடிவடைந்ததும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் மன்றினை வெளிநடப்பு செய்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மதிப்புக்குரிய தங்களுக்கு கிளிநொச்சி சட்டத்தரணிகள் தெரிவித்துக்கொள்வதாவது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்க்குரிய கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையானது வவுனியா சிறைச்சாலையிலே இயங்கி வருகின்றது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மட்டுமன்றி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டு விசாரனையின் நிமித்தம் தடுத்து வைக்கப்படும் விளக்கமறியல் கைதிகளும் வவுனியா சிறைச்சாலையிலே தடுத்து வைக்கப்பட்டுளனர்.

மேற்படி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற கைதிகள் மீதான சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் நேரடியானதும் தம்மால் நியமிக்கப்படும் நபர்கள் மூலமானதுமான மிலேச்சத்தனமான மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கல் எவ்வித காரணங்களற்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும்  ஒரு கைதி தொடர்பில் சிறைச்சாலை அத்தியகட்சருக்கு நீதிமன்றினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படும் பட்சத்தில் குறித்த கைதியினை உரிய முறையில் பாதுகாத்து உரிய தவணையில் மன்றில் முற்ப்படுத்துவது சிறைச்சாலை அத்தியட்சரின் கடமையாகும். எந்தவித காரணமுமன்றி கைதிகள் தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது.

மேலும் வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பல சம்பவங்கள் ஏற்கனவே இருக்கின்ற வேளை அண்மையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி 21.06.2017 அன்று பிணையில் விடப்பட்டு 22.06.2017 அன்று நீதிமன்று அழைத்து வரப்பட்ட வழக்கு இலக்கம். B|348|17 முதலாம் சந்தேக நபர் சிறைச்சாலை அலுவலரால் தாக்கப்பட்டு கிளி நொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் ஏற்க்கனவே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 28.06.2017 அன்றாகிய இன்று முற்படுத்தப்பட்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வழக்கு இல B|85|17 இன் 5ம் சந்தேக நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மன்றில் முற்படுத்தப்பட்டார். குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களினதும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதனால் குறித்த கைதிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை காணப்படுகிண்றது.

மேற்படி விடையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றயதினம் எமது அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்க்கொள்கின்றோம்.

01. குறித்த தாக்குதல்களை மேற்க்கொண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரனைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

02.குறித்த குற்ற செயல்களுடன் தொடர்புடைய அலுவலர்கள் விசாரணை முடியும் வரை சாட்சிகளின் தலையீடு செய்யாத வகையில் பதவி இடை நீக்கல் செய்யப்பட வேண்டும்.

03.கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி நீதிமன்ற கைதிகளுக்கு விளக்கமறியல் சிறைச்சாலை ஒன்றை அமைக்க ஆணை செய்தல்.

ஆகிய விடயங்கள் இவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers