குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஐந்தாம் சாட்சியான அரச தரப்பு சாட்சியம் திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்தால் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் என தெரிவித்து மூடிய நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் இரண்டாம் மாடியில் ட்ரயலட் பார் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
அதன் போதே குறித்த சாட்சியம் தான் திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்தால், தனது அம்மா மற்றும் தங்கைக்கு ஆபத்து என தெரிவித்து திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளிக்கவில்லை.
அதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் ஊடகவியளாலர்கள் நீதிமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மூடிய நீதிமன்றில் தனது சாட்சியங்களை தெரிவித்தார்.
Spread the love
Add Comment