இந்தியா

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி


இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர்   நசீம் ஜைதி இன்றையதினம் அறிவித்துள்ளார்.

தற்போதைய குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஓகஸ்ட் 10ஆம் திகதி முடிவடையவுள்ளதனால் புதிய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூலை 4ஆம் திகதி  ஆரம்பமாகி  ஜூலை 18 ஆம் திகதி  நிறைவடையவுள்ளது. வாக்குப்பதிவு  ஓகஸ்ட் 5ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டு  அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply