உலகம் பிரதான செய்திகள்

6 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த தற்காலிக தடை நடைமுறைக்கு வந்துள்ளது


சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முக்கிய முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட 90 நாட்களுக்கான தற்காலிக தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 27ம் தடை விதித்திருந்தார்.

டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமனற்ம் அனுமதியளித்ததனைத்  தொடர்ந்து அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளை விதித்திருந்தது.

அதன்படி தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்லும்போது அங்கு தங்கியிருக்கும் தங்களது பெற்றோர், கணவன் -மனைவி, குழந்தை, மகன், மகள், மருமகள், மருமகன் உறவு முறைகளை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.

எனினும் பாட்டி, தாத்தா, பேரக்குழந்தைகள், அத்தை, மாமா, அண்டை வீட்டினர், மைத்துனர், மைத்துனி, சித்தப்பா குழந்தைகள் போன்றோர் நெருங்கிய உறவினர்களாக கருத முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 6 முக்கிய முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய 90 நாட்களுக்கான தற்காலிக தடை இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap