இலங்கை பிரதான செய்திகள்

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றுமே நடக்கவில்லை என கூற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

புதிதாக அமைக்கப்படவுள்ள  உத்தேச அரசியல் யாப்பானது தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குரிய தீர்வாக அமையும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசின் கொள்கைத் திட்டத்தின் புதிய அரசியல் சாசனத்திற்கு தாம் ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றுமே நடக்கவில்லை என கூற முடியாது எனவும்  பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்;டுதான் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிகள்  விடுவிக்கப்பட்டு வருவதுடன் கைதிகள் 3.2 சதவீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களின் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவி;ததுள்ளார்.

தமிழ்மக்களின் முக்கிய பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்காக நாட்டின் சட்டவாக்கம்,சமூக ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும் எனவும்  அதற்காகதான் தாம் ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்து; தேசிய அரசாங்கத்தினையும் அமைத்துள்ளநிலையில்  அதனை குழப்ப முனைவது மிக முட்டாள் தனம் எனத் தெரிவித்த சுமந்திரன் நாம் எதனை  அடைய நினைக்கின்றோமோ அதற்கான  வழியினைதான் அமைத்து இருக்கின்றோமெனவும் தெரிவித்தார்

Spread the love

3 Comments

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • 1.நாம் எதனை அடைய நினைக்கின்றோம் என்பதை சுமந்திரனால் விரித்துரைக்க முடியுமா?
  2.இத்துடன் அதற்கான வழியினை தமிழ் மக்களுக்கு விளக்க முடியுமா?
  3.உத்தேச அரசியலமைப்பையும் விளக்க முடியுமா?

  • Dear Logeswaran,

   You may aware what we are willing to reach as Sumanthiran and everyone aware, But its not the time to disclose the way to reach.
   Avoid silly questions and please encourage leaders like Sumanthiran with long sharp vision.

   • வேடிக்கையான அறிக்கைகளை தவிர்த்து கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் பலரின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி நன்றாகப் புரிந்துகொள்ள பதில்கள் உதவும் என்று நினைக்கின்றேன்.

Share via
Copy link