உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸில் மசூதி ஒன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


பிரான்ஸின் தெற்கு பகுதி ஒன்றில் உள்ள மசூதி ஒன்றிற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவீன்யோங்கில் உள்ள அராமா மசூதியிலிருந்து வழிபாட்டினை மேற்கொண்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வித முக்காடு அணிந்திருந்த சந்தேக நபர்கள் இருவர் அவர்களை நோக்கி வந்து தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கார் ஒன்றிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தை நோக்கி சுட்டனர் எனவும் அவர்கள் கைத்துப்பாக்கியும், சிறிய துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தனர் எனவும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதவில்லை என பிரான்ஸ் காபவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.