குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அதிகளவில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இது தொடர்பில் பாரியளவிலான குற்றச்சாட்டுக்களோ முறைப்பாடுகளோ செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment