ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை ஜூலை 7ம் திகதி எடுக்கப்படவுள்ளது
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து 3 ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும் பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதேபோன்று வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. இந்தநிலையில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று பட்டியலிடப்பட்டு இருந்த போதும் மனுதாரர் ஜோசப் தரப்பு வழக்கறிஞர் வராததால் வழக்கினை ஒத்தி வைக்க வேண்டுமென நீதிபதிகளிடம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதிகள் ஜூலை 7ம் திகதிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment