குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து மாணவர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
லஹிரு உள்ளிட்ட ஐந்து மாணவர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அண்மையில் சுகாதார அமைச்சிற்குள் அத்து மீறி பிரவேசித்து நடத்த போராட்டம் தொடர்பில் இவ்வாறு லஹிரு உள்ளிட்டவர்கள் கைது செய்பய்பட்டிருந்தனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment