குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது வெளிநாட்டு பயணங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு வரையறைகளை பிறப்பித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் நிறைவடையும் வரையில் வெளிநாட்டுப் பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான தேவைகள் இருந்தால் அது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ள பிரதமர் அரசாங்கத்தின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Add Comment