குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்வதற்கு கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படாத நிலையில் அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் பங்கேற்பதில் எவ்வித பயனும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இரண்டாண்டு காலம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment