சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தால் ஏராளமான ஆவணங்கள், மற்றும் கணிணிகள் எரிந்து அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் 4வது தளத்தில் சினிமாத் துறையினரின் கோப்புகள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் தீ விரைவாக அறை முழுவதும் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீயானது மின்கசிவால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
Add Comment