Home இலங்கை கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்:- வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை…

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்:- வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை…

by admin


கிளிநொச்சி மாவட்டத்தில் முச்சக்கரவண்டி போக்குவரத்தினை சீர்படுத்தும் பொருட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது, அதனடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்திற்குட்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 450 பேர் சேவையில் ஈடுபடுவதாக அறியக்கிடைக்கிடைப்பதுடன். கடந்த காலங்களில் செயற்பட்ட நான்கு நிர்வாகத்தினரும் ஒழுங்கான முறையில் செயற்படாத காரணத்தால் பல பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளமையும் அறியக்ககூடியதாக உள்ளது.

மேலும் கடந்த வருடம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் போக்குவரத்து நியதிச்சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின் நலன்கருதி முச்சக்கர வண்டிகள் சங்கங்களையும் நெறிப்படுத்தி கண்காணிக்க அக்கறை கொண்டுள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொமுது பயணிகள் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான அறிவித்தலை கடந்த 25.05.2017 ம் திகதி கடிதம் முலம் தற்பொழுது செயற்பாட்டிலுள்ள சங்கத் தலைவர் ஊடாக அதிகாரசபை தெரியப்படுத்தியிருந்தது.

இவ்அறிவித்தலின்படி இதுவரையில் 95 உரிமையாளர்களே தங்களின் விபரங்களை எமது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர், ஏனைய உரிமையாளர்கள் தமது விபரங்களை ஒப்படைக்காமல் அகக்கறையின்றி செயற்படுகின்றனர். எனவே இதுவரை காலமும் ஆவணங்களை ஒப்படைக்கத்தவறிய முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்;வரும் 25-07-2017 ஆம் திகதிக்கு முன் ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்ட விபரங்கள் அடங்கியதான கோவையை எமது கிளிநொச்சி மாவட்ட வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் குறிப்பிட்ட நடைமுறைகளுக்கு அமைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் செயற்படாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் புதிய நிர்வாக தெரிவுப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனையும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார், அத்தோடு பொது மக்களின் நன்மை கருதி தரமான சேவை வழங்குவதற்கு அனைவரும் ஒழுங்;கு விதிகளுக்கு அமைவாக செயற்பட்டு நல்லதொரு புதிய நிர்வாகத் தெரிவினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்பிக்கையோடு முயற்ச்சி செய்யுங்கள் முன்னேற முடியும் – அமைச்சர் டெனிஸ்வரன்:-

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று 07.07.2017 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நாவலர் வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில், யாழ்ப்பாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் இதுவரையில் 1360 பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் 5 மாவட்டங்களிலும் இருந்து ஒரு மாவட்டத்திற்கு 60 பயனாளிகள் வீதம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூலமாக வாழ்வாதார செயற்ப்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு சரியான திட்டத்தினை தெரிவு செய்வது சம்மந்தமாக நேர்முகத்தேர்வுகளும் நடாத்தப்பட்டதுடன் அவர்களினால் தெரிவுசெய்யப்பட திட்டங்கள் பதிவுசெய்யப்பட்டு நிதி ஆணைக்குழுவின் ஒப்புதலை பெறுவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.

அந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அமைச்சர் டெனிஸ்வரன் கலந்துகொண்டு பயனாளிகளை அறிவுறுத்துகையில், எமது இனத்தின் விடிவிற்காக பாடுபட்ட பல முன்னால் போராளிகள் ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும், சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறியக்கிடைப்பதாகவும், அவ்வாறான நிலையினில் அவர்கள் காணப்படுவார்களானால் அவர்கள் பற்றிய விபரங்களை தனக்கு அல்லது தனது கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூலமாகவும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதோடு, பல தம்பி தங்கையர் தமது உறவினர்களை கண்காணிப்பதற்காக தமது கல்வியினை இழந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார், மேலும் பொதுமக்கள் தாங்கள் வாழுகின்ற பகுதிகளில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் குறிப்பாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்றாட வாழ்கையினை சுயமாக நடாத்த முடியாதவர்கள் காணப்படின் அவர்கள் குறித்தும் தனக்கோ அல்லது தனது திணைக்களத்திற்கோ தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார், குறிப்பாக அவர்களுக்கான உதவிகளை தம்மால் முயர்ச்சிக்கப்படும் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடன உதவித்திட்டங்கள் வாயிலாக பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் பயனாளிகளை அறிவுறுத்துகையில் முயற்சி இருந்தால் முன்னேற முடியுமென தெரிவித்துள்ளதோடு, அவர்கள் தமக்கு ஏற்புடைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொண்டு அதன்மூலம் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் அதிக வருவாயினைப் பெற்று வினைத்திறன் உடையதாக மாற்றிக்கொள்ள முடியுமெனவும், கடந்த காலங்களில் உதவித்திட்டங்களை பெற்ற பலர் அயராத முயற்ச்சியால் மாதாந்தம் 25000 ரூபா வரையில் வருமானம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியதோடு அவற்றின் மூலம் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு நல்லதொரு கல்வியினை வழங்கவேண்டுமென்றும் அதுவே எமது சமூகத்திற்கான நிலையான சொத்து எனவும் அறிவுறுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More