இலங்கை பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் எதிர்க்கவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படுவதாக மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பான உத்தேச திட்டத்தில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை குறைக்கும் வகையிலோ அல்லது பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையிலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்ல ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் எதிர்க்கவில்லை எனவும், ஏனைய மதங்களை வழிபாடு செய்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென்றே கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers