குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டுமென சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் மூன்று உப ஜனாதிபதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
ஜனநாயக சோசலிச குடியரசாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த இலங்கையை, ஐக்கிய இலங்கை என அடையாளப்படுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment