இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 3 –வடமராட்சியில் பதற்றம் – வீதிகளில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர்  காவல்துறையனரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடமராட்சியின் கலிகைச் சந்தி, துன்னாலை வேம்படிச் சந்தி ஆகியவற்றில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேம்படிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் காவல்துறையினரின்  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதனைத்  தொடர்ந்தே பதற்றமான நிலை காணப்படுகிறது.

குறித்த பகுதிகளுக்குள் காவல்துறையினர் ; உட்செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற நிலை காணப்படுவதாகவும் காவல்துறையினர் உள்ளே   சென்றால் மோதல்நிலை உருவாகலாம்  எனவும்கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணைப்பு2 – யாழில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

Jul 10, 2017 @ 04:11

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திச் சென்ற போது வாகனத்தை சோதனையிட காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.

வாகனத்தைச் சோதனையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காது வேகமாக வாகனத்தைச் செலுத்திய போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கி;ச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உப பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற லொறி மீது  காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர் பலி

Jul 9, 2017 @ 12:56

யாழ் வட மராட்சி கிழக்கு, மணல்காட்டில்  காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்   இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனத்தினைச் சோதனைக்காக மறித்தபோது நிறுத்தாமற் சென்ற போதே  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, ஆத்திரம் கொண்ட அவ்வூர்வாசிகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை காவல் நிலையத்தின் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும், ஆத்திரம் கொண்ட பொது மக்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதையும், அதனால், ஒருவர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, ஊர் மக்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.