பிரித்தானியாவின் நட்சத்திர பராஒலிம்பிக் வீரர் டேவிட் வியர் (David Weir) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். 38 வயதான சக்கர நாற்காலி ஓட்டவீரர் டேவிட் வியர் ஆறு தடவைகள் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு லண்டன் பரா ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் தமது பெயரை உச்சரித்து ஊக்கப்படுத்தியமை மரணிக்கும் தருணம் வரையில் நினைவிலிருந்து நீங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் டேவிட் வியர் மூன்று தங்கம் அடங்களாக நான்கு பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமக்கு ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும், இந்த தருணம் ஓர் உணர்ச்சி மிக்க ஓர் தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment