குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவரும் குற்றம் சுமத்த முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பளை நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியிலோ அல்லது சர்வதேச அளவிலோ நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து விமர்சனங்களை வெளியிட முடியாது எனவும், இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Add Comment