இலங்கை பிரதான செய்திகள்

மல்லாகம் பகுதியில் கடத்தப்பட்ட மாணவி வரணிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.


யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து வாகனமொன்றில்  கடத்தப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர்  இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தென்மராட்சி வரணிப் பகுதியில், வாகனத்தில் இருந்து  தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவியே இவ்வாறு கடத்தப்படிருந்தார்.  மாணவி  பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில்  வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால், குறித்த மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

கடத்தியவர்கள் மற்றும் கடத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளிவராத நிலையில், மல்லாகம் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினர்  இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers