Home உலகம் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு

ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு

by admin

ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அரச படையினருடனான சண்டையில் உயிரிழந்துள்ளதாக லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும்  சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல் கிடைத்ததா? என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

அல்-பக்தாதியின் மரணத்தை ஐ.எஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள்  உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் அல்-பக்தாதி மரணமடைந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More