குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ், தலைமைப் பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க விரும்பவில்லை என மெத்யூஸ், இலங்கைக் கிரிக்கட் நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து ஓருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தது.
அண்மைக் காலமாகவே இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெத்யூஸின் பதவி விலகலை இலங்கை கிரிக்கட் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
Add Comment