இலங்கை

புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது என சர்வதேசம் அங்கீகரித்துள்ளது – தினேஸ் குணவர்தன


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சர்கள் புதிய வாகனங்களை விற்பனை செய்து அந்தப் பணத்தை டெங்கு நோயாளிகளுக்கு செலவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கோரியுள்ளார்.

நாடு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எளிமையான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனை International அங்கீகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பில் சில வெளிநாடுகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் எமது நாட்டு அரசாங்கம் நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த தினேஸ் குணவர்தன  இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றது எனவும் இதனால்தான் தேர்தல் நடத்த காலம் தாழ்த்தி வருகின்றது எனவும்   குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap