இலங்கை

பாடசாலையொன்றின் 41 மாணவர்களின் கைகளில் வெட்டுக் காயங்கள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மெதிகரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் 41 மாணவ மாணவியரின் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தரம் 10 மற்றும் 11 ஆகியனவற்றைச் சேர்ந்த மாணவ மாணவியரின் கைகளில் இவ்வாறு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

ஏதோ ஓர் வகை போதைப் பொருளைப் பயன்படுத்தியதன் பின்னர் இவ்வாறு கைகளை மாணவ மாணவியர் வெட்டிக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் அசாதாரண செயற்பாடுகளை அவதானித்த பிரதி அதிபர் இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கைகளில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டவர்களில் ஏழு மாணவியரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply