இலங்கை

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படும் – பிரதமர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன்   சந்திப்பு நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவ கற்கையின் குறைந்தபட்ச தகுதிகளை சட்டமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார் என  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவும் பங்கேற்றிருந்தார் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலளார் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.