இலங்கை

பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை – பிரதமர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை என பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நாடுகளும் எதிர்நோக்கி வரும் பயங்கரவாதப் பிரச்சினைக்கு தீர்வு காண பிராந்திய வலய நாடுகள் பொது இலக்குடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பில் நீண்ட அனுபவம் காணப்படுகின்றது எனவும், அதிர்ஸ்டவசமாக ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் ஒன்று முடிவுக்குக் கொண்டு வரப்படுவதன் மூலம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வலய நாடுகளுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், ஏனைய நாடுகளுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply