குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்காவில் பொருளாதார நெருக்கடியை தடுக்க சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்காவின் நிதி அமைச்சர் Malusi Gigaba இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார். 14 அம்ச திட்டமொன்றின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் மூலம் பொருளாதார பின்னடைவுகளிலிருந்து மீள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முனைகளில் நாட்டின் பொருளாதார பின்னடைவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Add Comment