குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய செயலகமொன்று நிறுவப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த செயலகம் உருவாக்கப்பட உள்ளது.
இது தொடர்பிலான சட்டமூலமொன்றும் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் இந்த புதிய செயலகம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக காத்திரமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த புதிய செயலகம் உருவாக்கப்பட உள்ளது.
Add Comment