இலங்கை

இணைப்பு 2 – இலங்கை – பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள்; கைச்சாத்திடப்பட்டுள்ளன

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள்    கைச்சாத்திடப்பட்டுள்ளன.    தரக்கட்டுப்பாட்டு , விவசாய ஒத்துழைப்புக்கள் ,  தகவல் தொழில்நுட்பம்,  கப்பற்துறை , இரு நாடுகளின் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களுக்கு வீசா பெறுவதனை விலக்களித்தல் பற்றிய ஒப்பந்தம் ஆகியவற்றுடன் இரு நாடுகளுக்கிடையே ஆடைக் கைத்தொழில்துறை தொடர்பான உடன்படிக்கையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் பற்றிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி –  ஷேக் ஹசீனா  இன்று உத்தியோகபூர்வ சந்திப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும் :

Jul 14, 2017 @ 04:52

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின்  அழைப்பின் பேரில் பங்களாதேஷிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டுள்ள ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா   ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) நண்பகல் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பாக இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி செய்லக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் விவசாயம், கல்வி, வெளிநாட்டலுவல்கள் பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்காளாதேஷில் Laugfs gas நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நேற்று (13) பிற்பகல் டாக்கா நகரில் இடம்பெற்ற விசேட வர்த்தக சந்திப்பிலும் பிரதம அதிதியாக ஜனாதிபதி   கலந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.