குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை 11.50 மணிக்க புறப்பட்ட புகையிரதம் மலை மாங்குளத்தை அடைந்து அங்கிருந்து புறப்பட்ட போது மாங்குளத்திற்கும் முறுகண்டிக்கும் இடையில் தவறுதலாக பயணி ஒருவா் தவறி விழுந்து இறந்துள்ளார்
குறித்த புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த நபரை தேடும் பணியில் மாங்குளம் காவல்துறைக் குழு ஒன்று ஈடுபட்டுள்ள நிலையில் இன்று காலை முறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Add Comment