குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment