இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது:-

ஜம்மு காஷ்மீரில் நேற்றையதினம் ராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா மாவட்டம், ட்ரால் பகுதியில் உள்ள சட்டூரா வனப் பகுதியில், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவத்தினர் தேடுதல் மேற்கொண்ட போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது எனவும் அவர்களை அடை யாளம் காணும் பணி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.