குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் தொடர்பிலான கவனம் இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளின் திறமையை குறையச் செய்துள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கட் வீரர் மார்க் ராம்பிரகாஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி கூடுதலாக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு இருபது உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment